ஐஎஸ்எல் கால்பந்து | பெங்களூரு அணியுடன் சென்னை இன்று மோதல்

ஐஎஸ்எல் கால்பந்து | பெங்களூரு அணியுடன் சென்னை இன்று மோதல்
By: TeamParivu Posted On: February 07, 2024 View: 25

பெங்களூரு: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி - பெங்களூரு எப்சி அணிகள் மோதுகின்றன. பெங்களூரு 13 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 டிரா, 6 தோல்விகளுடன் 11 புள்ளிகள் பெற்று பட்டியலில் 11-வது இடத்தில் உள்ளது. சென்னை 12 ஆட்டங்களில் 3 வெற்றி, 3 டிரா, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று 9-வது இடம் வகிக்கிறது.
பெங்களூரு அணி கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-3 என்ற கோல் கணக்கிலும் சென்னை அணி 0-3 என்ற கோல் கணக்கில் மும்பை அணியிடம் தோல்வி அடைந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கின்றன.
இந்த சீசனில் பெங்களூரு அணியுடன் 2-வது முறையாக மோதுகிறது சென்னை அணி. கடந்த டிசம்பர் 13-ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை 2-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தியிருந்தது. இதே போன்ற செயல்திறனை இன்றைய ஆட்டத்திலும் வெளிப்படுத்துவதில் சென்னையின் எப்சி அணி வீரர்கள் முனைப்பு காட்டக்கூடும்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..